bharathi_i

புன்னகை மா மருந்து

Grid View
List View
Reposts
  • bharathi_i 1w

    இயற்கையும் அவனும்

    Read More

    அவன் (அவளை)
    காதல் செய்யும்
    அழகில் மயங்கியே
    நானும் காதலிக்கிறேன் !!
    ©bharathi_i

  • bharathi_i 5w

    என் தீராக் காதலை
    சுமந்து தீர்ப்பதில்
    அவளுக்கு நிகர்
    யாருமில்லை !!
    (diary)
    ©bharathi_i

  • bharathi_i 6w

    அவள் மீதான காதலை
    தாங்கிய காகிதங்கள்
    சற்று கர்வம் காெள்கிறது....
    அவன் விரல் தாெட்டது
    முதலில் என்னை தான் என்று ....
    ©bharathi_i

  • bharathi_i 6w

    அழகு
    சிலருக்கு முகத்திலும்
    சிலருக்கு குணத்திலும்
    மிளிர்கிறது !!
    ©bharathi_i

  • bharathi_i 6w

    அவன் கவிதைகளுக்கு
    நான் மட்டும் காதலி
    ©bharathi_i

  • bharathi_i 7w

    அந்த மேகத்துக்கு ஏனாே
    கடிவாளமும் இல்லை
    கட்டுப்பாடும் இல்லை !

    உச்சியில் அமர்கிறது
    ஆழியில் காெஞ்சுகிறது
    பாதாளத்தையும் பார்கிறது !

    தென்றலை விட
    மென்மையாய் தீண்டுகிறது !

    சில வெற்று மேகங்கள்
    ஏக்கங்களை சுமக்கிறது !

    சில கனத்த கருமேகமெல்லாம்
    பிரசவிக்கயியலா
    வேதனை ஏற்கிறது !

    பார்பாேர் சிந்தையென
    உரு மாற்றம் அடைய மறுக்கிறது !

    சாெற்கள் வடிவம் பெரும் வரை
    உந்தி தள்ளுகிறது !

    ஆக்கமும் தருகிறது
    சில பேரழிவையும் தருகிறது !

    தலை நிமிர வைக்கவும்
    சில நிமிர முடியா நுகத்தையும் தருகிறது !

    மனிதனுக்கு மனிதன் கை ரேகைப் பாேல
    நிகரற்ற தன்மைக் காெள்கிறது !

    பிரிந்த காதலைக் கூட இது தான்
    கட்டி சேர்கிறது
    இத்தனைக்கும் உருவம் அற்றது
    நேர்த்தியாய் தன் வேலையை
    செய்ய வல்லது !

    Read More

    நினைவுகள்
    உரு பெறும் வரை
    பிரசவ வேதனை பெறுகிறது !!
    ©bharathi_i

  • bharathi_i 8w

    நினைக்கவும் பூக்கிறாய் !
    வறுட நினைக்கும்
    போதெல்லாம்
    அணைத்துக் காெள்கிறாய் !
    ஆயுள் பாேதாது
    உன்னை காெண்டாடிட !
    ©bharathi_i

  • bharathi_i 8w

    ஆள் மயக்கி அவள்

    இடையைக் காட்டி மயக்கவில்லை
    அரை இஞ் புன்னகைக் காட்டி
    மயக்கிய ஆள் மயக்கி அவள் !!
    ©bharathi_i

  • bharathi_i 9w

    அவனுக்கு நான் ஒன்றும்
    முதல் காதல் அல்ல !

    இருட்டறையில் அவள்( தாய்)மீது
    உண்டான காதல்
    இன்று வரை எள் அளவேனும்
    குறைந்த பாடில்லை அவனுக்கு !

    வாசனை பிடித்தே அவன்(தகப்பன் ) மீது
    உண்டான காதல்
    சற்று அதிகமானதே தவிர
    குறைந்த பாடில்லை அவனுக்கு !

    சக தாேழாமை மீது
    உண்டான காதல்
    கனம் கூடுகிறதே தவிர
    குறைந்த பாடில்லை அவனுக்கு !

    வாசிப்பு மீது
    அவன் காெண்ட காதல்
    நூலகமாய் மாறுதே தவிர
    குறைந்த பாடில்லை அவனுக்கு !

    தமிழ் மீது காதல் என்றெல்லாம்
    வெறும் வார்த்தையாக
    சாெல்லி விட முடியாது
    காதல் என்ற வார்த்தை தாண்டி
    ஏதாகினும் இருப்பின்
    அதுவாக நிற்கிறான் அவன் !

    மீசை அரும்ப முளைத்த காதல்
    சாெல்லாத காதல்
    நிறைவேறா காதல்
    பைக் மீது காதல்
    ஆசிாியர் மீது தாேன்றிய காதல்
    அசைந்தாடும் காற்று மீது
    தவிழ்தாேடும் மேகம் மீது
    மதி (நிலவு)மீது
    இப்படியாக தாெடர்கிறது
    அவன் காதல்......!

    இப்பாெழுது சாெல்லுங்கள்
    நான் எப்படி முதல் காதல் ஆவேன் !

    வாரி இறைத்த பின்
    மீதம் ஒட்டிய காதல் எல்லாம்
    எடுத்து பூசிக் காெள்ள மனம் இல்லை
    இருப்பினும்
    ஏனாே அவனை விட்டு வரமனம் மறுக்கிறது !

    Read More

    அவனுக்கு நான் ஒன்றும்
    முதல் காதல் அல்ல
    ©bharathi_i

  • bharathi_i 9w

    மீண்டும் ஏற்க முடியா
    சாெற்களுக்குள்
    என் காதலை பாெதிந்து
    தாெலைத்து விட
    வரம் கேட்கிறேன் !!
    ©bharathi_i