sandhiyabhavi

S@πDhiy@ Bh@√ani(அம்மா ��)

Grid View
List View
Reposts
  • sandhiyabhavi 90w

    சொல்லாய் விளக்க நினைத்தேன்
    எழுத்தில் எழுதி வைத்தேன்
    என் கவியின் முடிவோ
    உன் வடிவம் கொண்டே முடிந்தது
    ©sandhiyabhavi

  • sandhiyabhavi 90w

    மூன்றெழுத்தை கொண்டவனே
    முப்பால் மொழிந்தவனே
    முற்பொழுதும் உன் மடியில்
    மூன்றாம் பிறை கண்டேனே உன் வடிவில்
    முத்தமிழாய் நீ உடனிருக்க
    சரணடைந்தேன் உன் தடத்தில்..
    ©sandhiyabhavi

  • sandhiyabhavi 91w

    உறைந்த பனி அவள் மேனி
    உருக கண்டாள்
    அவன் உதடுகள் உணவளிக்க
    தொடங்கிய பின்பு...
    ©sandhiyabhavi

  • sandhiyabhavi 92w

    அவன் கொஞ்சும் அழகை கண்டு
    தஞ்சம் கொண்ட நெஞ்சம்
    எஞ்சிய அழகினை மனம் முடித்து
    மஞ்சம் கொண்டது
    ©sandhiyabhavi

  • sandhiyabhavi 92w

    தினமும் தவரா
    என் ரா(இரவு) உறக்கம் கலைத்து...
    மறக்க விரும்பும் நிகழ்வை
    மீண்டும் நினைக்க செய்து
    என்‌ இரவை சுவைக்கும்
    என் இனிய தனிமையே!!!!
    ©sandhiyabhavi

  • sandhiyabhavi 113w

    இன்றைய நிலை நிலையானது அல்ல
    துன்பத்தில் துவண்டுவிடுவதிலும்
    மன அழுத்ததில் மாண்டுவிட
    முடிவெடுப்பதில் வருவதில்லை முடிவுகள்
    இயற்கையில் இயற்கையாய்
    உன் மூச்சு கலக்கும் வரை
    முயற்சி செய் முடிவு நிட்சயம் உண்டு
    வாழ்வின் வினா அனைத்திற்கும்
    உன் செயலே விடையாகும்...

    ©sandhiyabhavi

  • sandhiyabhavi 118w

    மனம் என்னும் கடலில்
    கடந்தகால நினைவென்னும்
    ஆழ்கடல் சென்று
    கரை வந்தடைந்தேன்
    கண்ணீர் என்னும் முத்துடன்...
    ©sandhiyabhavi

  • sandhiyabhavi 121w

    மறைமுகமாய் வைத்துக்கொள்வதும்
    மகிழ்ச்சியே!!....
    உள்ளத்தில் உன் மீது உண்டான
    காதலும்......
    உனக்கே தெரியாதவாறு நான்‌ மறைத்து
    ரசித்து வரும் உன் புகைப்படமும்...
    ©sandhiyabhavi

  • sandhiyabhavi 126w

    அவன்‌ நெடுஞ்சாலை நெற்றியில்
    இருவிழி வழியில் எவ்வழி செல்வேன்
    மூக்கை நோக்கி முதலடி வைத்தேன்
    அவன் இதழ் அளித்த வித்தையில்
    என் வாழ்வின் நித்தியம் அடைந்தேன்.
    ©sandhiyabhavi

  • sandhiyabhavi 126w

    நிலவு:

    இயற்கை அழகின் ஒன்றாய்
    நான் இருப்பின்
    அனைவரும் உறக்கம் கொள்ளும் நேரம்
    நான் உலவுவதின் பயன் என்ன?

    கதிரவன்:

    படைவீரர்களுடன் பகலில் பெண் சென்றாலும்
    கண்களால் கற்பழிக்கும் கலிவுலகமடியிது
    இரவிற்கு இனிமை அளிக்கும் இனியவளே
    இச்சைக்கு இறைத்தேடும் இவ்வுலகில்
    தனிமையில் வலம் வரும் வரம் பெற்றாய்
    என்று மகிழ்ந்துக்கொள்
    ©sandhiyabhavi